ஆண்களுக்கான சாவ் ஃபுட்சால்: இரண்டாவது போட்டியில் நேபாளத்திடம் இலங்கை  தோல்வி 

Published By: Vishnu

16 Jan, 2026 | 08:12 PM
image

(நெவில் அன்தனி)

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பன ஆண்களுக்கான தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன ஃபுட்சால் (SAFF Futsal Championship) சம்பியன்ஷிப்பின் இரண்டாவது போட்டியில் நேபாளத்திடம் 1 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பூட்டானுக்கு எதிரான போட்டியை 3 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட இலங்கைக்கு இந்தத் தோல்வியினால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு தவறியுள்ளது.

பாங்கொக், ஹுவா மெக் உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற நேபாளத்துக்கு எதிரான போட்டியின் 10ஆவது நிமிடத்தில் மொஹமத் குர்ஷீத் அலாதியான கோல் போட்டு இலங்கையை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து நேபாள வீரர் சரோஜ் தமாங் கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடரந்த முதலாவது நிமிடத்திலேயே மீண்டும் சரோஜ் தமாங் கோல் போட்டு நேபாளத்தை 2 - 1 என முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இலங்கை வீரர்கள் கடுமையாக முயன்ற போதிலும் அவை கைகூடாமல் போனது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45
news-image

எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முதல் தடவையாக ஒளிவெள்ளத்தில்...

2026-02-10 19:09:09
news-image

பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் பிரகாசிக்க...

2026-02-10 15:46:05