வருடத்தின் கடைசி மாத சிறந்த ஐசிசி வீரர் மிச்செல் ஸ்டாக், வீராங்கனை லோரா வுல்வார்ட்

Published By: Vishnu

16 Jan, 2026 | 07:17 PM
image

(நெவில் அன்தனி)

2025ஆம் ஆண்டு கடைசி மாதத்துக்கான ICCஇன் சிறந்த வீரர் விருதை அவுஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்துவீச்சார் மிச்செல் ஸ்டாக்கும் சிறந்த வீராங்கனை விருதை தென் ஆபிரிக்க அணித் தலைவி  லோரா வுல்வார்டும் வென்றெடுத்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 4 - 1 என்ற ஆட்டக் கணக்கில் வென்றதில் பெரும் பங்காற்றிய மிச்செல் ஸ்டாக் தொடர் நாயகன் விருதை வென்றெடுத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் டிசம்பர் மாதம் நடைபெற்ற 3 டெஸ்ட்களில் மிச்செல் ஸ்டாக் 21.25 என்ற சராசரியுடன் 16 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் 139 ஓட்டங்களைப் பெற்றார்.

பிறிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டி போட்டியில் 8 விக்கெட்களைக் கைப்பற்றிய மிச்செல் ஸ்டாக் 77 ஓட்டங்களையும் பெற்று ஆட்டநாயகன் ஆனார்..

தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற தீர்மானம் மிக்க 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் மிச்செல் ஸ்டாக் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 54 ஓட்டங்களைப் பெற்றார்.

மாதத்தின் ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபி, மேற்கிந்தியத் தீவுகளின் ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகியோரை பின் தள்ளியே மிச்செல் ஸ்டாக் இந்த விருதை வென்றெடுத்தார்.

அயர்லாந்துக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற இருவகை மகளிர் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் துடுப்பாட்டத்தில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம் மாதத்தின் ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை லோரா வுல்வார்ட் வென்றெடுத்தார்.

3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 111.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 255 ஓட்டங்களையும் மகளிர் சர்வதேச ரி20 தொடரில் 190.27 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 137 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

இந்த இரண்டு தொடர்களிலும் அவர் 3 சதங்களைப் பதிவுசெய்தார்.

அயர்லாந்துடனான கடைசி இரண்டு மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறையே 124 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களையும் பெற்ற லோரா வுல்வார்ட் தொடர்நாயகியாக தெரிவாகி இருந்தார்.

ரி20 தொடரின் முதலாவது போட்டியிலும் ஆட்டம் இழக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

தனது சக வீராங்கனை சுனே லுஸ், இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆனால், லோரா வுல்வார்டின் அபரிமிதமான ஆற்றல்கள் அவருக்கு சிறந்த  ஐசிசி   வீராங்கனைக்கான டிசம்பர் மாத விருதை வென்றுகொடுத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33
news-image

முதலாவது தலைவராக பொறுப்பேற்கிறார் குசல் மெண்டிஸ்...

2026-08-10 12:33:35
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:47:51
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில்...

2026-08-10 08:59:45