நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக - சரித்திர காலகட்ட மன்னனாக நடித்திருக்கும் 'திரௌபதி 2' எனும் திரைப்படத்தினை இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் மோகன் ஜி தலைமையிலான படக் குழுவினர் ஓராண்டாக திட்டமிட்டு, சென்னை- செங்கல்பட்டு- செஞ்சி -ஆகிய இடங்களில் திறந்தவெளி அரங்கங்களை அமைத்து 31 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. முன்னதாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் படக்குழுவினர் பங்கு பற்றி படத்தைப் பற்றிய பல விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, '' கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி - இதுவரை ஒரு ரூபாய் கூட ஊதியமாக பெறவில்லை. ஓராண்டு காலமாக இந்த படைப்புக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார். இந்தத் திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆட்சி செய்த வீர வல்லாள மன்னனை பற்றிய சரித்திர சான்றுகள் மற்றும் இலக்கிய சான்றுகளுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றிய பதிவாகவும் இப்படைப்பு உருவாகி இருக்கிறது '' என்றார்.
இதனிடையே ரிச்சர்ட் ரிஷி நடித்திருக்கும் 'திரௌபதி 2' எனும் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய எண்ணிக்கையிலான பட மாளிகைகள் கிடைக்காததன் காரணமாக இப்படத்தின் வெளியீட்டை ஏற்கனவே அறிவித்தது போல் ஜனவரி 23ஆம் திகதியன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM