நடிகை நபா நடேஷ் நடிக்கும் 'நாக பந்தம்' படத்தின் அப்டேட்ஸ்

16 Jan, 2026 | 05:27 PM
image

தெலுங்கு நடிகர் விராட் கர்ணா கதையின் நாயகனாக நடித்து வரும் ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நபா நடேஷின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் தயாராகி வரும் 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தில் விராட் கர்ணா , நபா நடேஷ், ஜெகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா மேனன், முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தொன்மையான வைணவ ஆலயங்களின் பின்னணியில் பிரம்மாண்டமான புராண திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபூ ரெட்டி மற்றும் நிஷிதா நாகி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் பார்வதி எனும் வேடத்தில்  நடிக்கும் நடிகை நபா நடேசின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் பார்வதியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிடப்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51