நடிகர் கிருஷ்ணா நடிக்கும்' தி மம்மி ரிட்டன்ஸ் ' பட தொடக்க விழா

16 Jan, 2026 | 05:19 PM
image

போதை பொருள் பாவனை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் 'தி மம்மி ரிட்டன்ஸ்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும் 'தி மம்மி ரிட்டன்ஸ்' எனும் திரைப்படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி , சுவாதி , ரெடின் கிங்ஸ்லி,  மாறன், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ்.  இசையமைக்கிறார். கொமடி என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை பெப்பின் டி ரெய்சின் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜே. கிஷோர் தயாரிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' கதாநாயகனின் தாய் பல வருட கோமா பாதிப்பிற்கு பிறகு மீண்டு வருகிறார். அவரை காப்பாற்றுவதற்காக கதையின் நாயகன் அவர் வாழ்ந்த 1990களின் உலகை மீண்டும் உருவாக்குகிறார். இதனால் ஏற்படும் சங்கடங்களை நகைச்சுவைத் ததும்பும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

இப்படத்தின் தொடக்க விழாவில் பிரபல இயக்குநர்களான விஷ்ணுவர்தன் - ஐ. அகமத் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50
news-image

ஓகஸ்டில் வெளியாகும் மாதவனின் 'ஜி டி...

2026-07-18 14:33:40
news-image

லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக வெற்றி...

2026-07-18 14:30:00
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸ்...

2026-07-18 14:26:40
news-image

நடிகர் லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2026-07-18 14:23:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17