ராகமைப் பகுதியில் போலி ஆவணங்களுடன் இருவர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள், முத்திரைக் குறியீடுகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள், மோட்டார் வாகன பதிவு சான்றிதழ்கள், பல்வேறு நிறுவனங்களின் கடித தலைப்புக்கள், தபால் அடையாள அட்டைகள், மற்றும் வாகன இலக்கத் தகடுகள் ஆகியவற்றுடனேயே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
51 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு சந்தேகநபர் களனிப்பிரதேச செயலகத்தில் சாரதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் மற்றையவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் . பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் மஹர நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM