(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்றைய தினம் இரண்டு முக்கிய போட்டிகள் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடைபெறவுள்ளன.
இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் இரண்டு அணிகளில் ஒன்றான குருநாகல் பெலிக்கன்ஸ் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள பி குழுவுக்கான போட்டியில் தர்கா நகர் சுப்பர் சன் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.


பெலிக்கன்ஸ் கழகம் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளது.
இக் குழுவில் தனது கடைசி லீக் போட்டியில் விளையாடும் சுப்பர் சன் கழகம் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சுப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும். எனினும் சென் மேரிஸ், சொலிட், பொலிஸ் ஆகிய போட்டிகளின் முடிவுகளிலேயே அதன் சுப்பர் 8 வாய்ப்பு தங்கி இருக்கிறது.
இதேவேளை ஏ குழுவில் இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றிபெறாத நிகம்போ யூத் கழகமும் இலங்கை போக்குவரத்துச் சபைக் கழகமும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள போட்டியில் தத்தமது முதலாவது வெற்றிக்கு குறிவைத்து விளையாடவுள்ளன.
இப் போட்டி பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


முன்னாள் சம்பியனான நிகம்போ யூத் கழகம் இம்முறை தான் விளையாடிய 4 போட்டிகளில் 3 இல் தொல்வி அடைந்ததுடன் ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இ.போ.ச. தனது ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதுடன் 27 கோல்களை எதிரணிகளுக்கு தாரைவார்த்துள்ளது. இதுவரை அந்த அணி ஒரு கோலைத்தானும் போடவில்லை.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM