சாவ் ஆடவர் ஃபுட்சால்: பூட்டானுடனான போட்டியை இலங்கை வெற்றிதோல்வியின்றி முடித்தது

Published By: Vishnu

16 Jan, 2026 | 02:07 AM
image

(நெவில் அன்தனி)

தாய்லாந்தில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண தெற்காசிய ஆடவர் ஃபுட்சால் சம்பியன்ஷிப்பில் பூட்டானுடனான போட்டியை இலங்கை 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

பாங்கொக், நொன்தபூரி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களையும் இரண்டாவது பகுதியில் தலா ஒரு கோலையும் போட்டன.

போட்டியின் 2ஆவது நிமிடத்தில் பூட்டான் வீரர் ஜெட்சுவென் டோர்ஜி முதலாவது கோலைப் போட்டார்.

எனினும் 6 நிமிடங்கள் கழித்து மொஹமத் ஆக்கிப் கோல் நிலையை சமப்படுத்தினார்.

அடுத்த நிமிடமே பூட்டான் சார்பாக நிமா வாங்டி கோல் நிலையை 2 - 1 என ஆக்கினார்.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஆக்கிப் தனது 2ஆவது கோலை போட இடைவேளையின்போது கோல் நிலை 2 - 2 சம நிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் 36ஆவது நிமிடத்தில் மொஹமத் தில்ஹாம் கோல் போட்டு இலங்கையை 3 - 2 என முன்னிலையில் இட்டார்.

ஆனால் இலங்கையின் மகிழ்ச்சி சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

போட்டியின் 38ஆவது நிமிடத்தில் பூட்டான் வீரர் தவா ஷெரிங் கோல் போட ஆட்டம் 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான சாவ் மகளிர் ஃபுட்சால் போட்டி 2 - 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இலங்கை ஆடவர் ஃபுட்சால் குழாம்

மொஹமத் அமான் (தலைவர்), மொஹமத் முர்சித், பரீக் அஹமத் பஸ்ருள் ரஹ்மான், மொஹமத் ஆக்கிப், மர்சூக் ஃபிராஸ் ஸீர், அஹமத் ஷரீப், ஆர்னிகன் சிவநாதன், மனரம் பெரேரா, நிலார் நதீம் அஹ்மத், மொஹமத் குர்ஷீத், நவீன் ஜூட் நிக்கலஸ், மொஹமத் தில்ஹாம், அஹ்மத் முசாதிக், அப்துல் அஸீஸ் மொஹமத் அஸ்மீர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26