(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக புலாவாயோ குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் இந்தியா 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
பிற்பகல் 5.10 மணியளவில் தடைப்பட்ட இப் போட்டி 2 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இலக்கு 34 ஓவர்களில் 96 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

இந்தியா 17.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னர் இந்தியா தனது இளம் அதிரடி வீரர் வைபவ் சூரியவன்ஷி உட்பட நால்வரை 70 ஓட்டங்களுக்கு இழந்தது.
அபிக்யான் குண்டு அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவை வெற்றி பெறச்செய்தார்.
அவரை விட அணித் தலைவர் அயுஷ் மஹாத்ரே 19 ஓட்டங்களையும் விஹான் மல்ஹோத்ரா 18 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரிட்விக் அப்பிடி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஹெனில் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் 9 அறிமுக வீரர்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி பெரும் சிரமம் அடைந்தது.

அறிமுக வீரர்களில் ஒருவரான நிட்டிஷ் சுதினி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன் அத்னித் ஜாம்ப் (18), சஹில் கார்க் (16), அர்ஜுன் மஹேஷ் (16) ஆகிய மூவர் 15 ஓட்டங்களுக்கு மெல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: ஹெனில் பட்டேல்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM