தொகை­ம­திப்பு மற்றும் புள்­ளி­வி­பரத் திணைக்­க­ளத்­தினால் தொகுக்­கப்­பட்ட தேசிய நுகர்வோர் விலைச்­சுட்­டெண்ணில் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளினால் அள­வி­டப்­பட்­ட­வா­றான பண­வீக்கம் ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில் 2015 நவம்­பரில் 4.8 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2015 டிசெம்­பரில் 4.2 சத­வீ­தத்­திற்கு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அத்துடன் டிசெம்­பரில் ஆண்டுச் சரா­சரி அடிப்­ப­டை­யி­லான பண­வீக்கம் 3.8 சத­வீ­த­மாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2015 டிசெம்­பரில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் நவம்­ப­ரி­லிருந்து டிசெம்­ப­ருக்கு 1.1 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தது. இம்­மா­தாந்த அதி­க­ரிப்­பிற்கு உணவு மற்றும் மது­வல்லா குடி­பான வகை­யி­லுள்ள விட­யங்­களின் விலை­களில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பே முக்­கிய கார­ண­மாகும். காய்­க­றிகள், பச்சை மிளகாய், அரிசி மற்றும் உடன் மீன் என்­ப­ன­வற்றின் விலைகள் இம்­மாத காலப்­ப­கு­தியில் அதி­க­ரித்­தன.

அதே­வேளை பெரிய வெங்­காயம், எலு­மிச்­சம்­பழம், உரு­ளைக்­கி­ழங்கு, நெத்­தலி மற்றும் கோழி இறைச்சி என்­ப­ன­வற்றின் விலைகள் வீழ்ச்­சி­ய­டைந்­தன.

2015 டிசம்பர் காலப்­ப­கு­தியில் மதுக் குடி­வ­கைகள், புகை­யிலை, போதைப்­பொ­ருட்கள்,தள­பா­டங்கள், வீட்­ட­லகுச் சாத­னங்கள் மற்றும் வீட்டல­கு­களின் கிர­ம­மான பேணல் போக்­கு­வ­ரத்து கல்வி மற்றும் உண­வ­கங்கள், சுற்­று­லா­வி­டு­திகள் துணை வகை­களும் அதி­க­ரித்­தன. துணி­வகை மற்றும் காலணி வீட­மைப்பு, நீர், மின்­வலு, வாயு மற்றும் ஏனைய எரி­பொருள் துணை­வ­கை­களின் விலைகள் வீழ்ச்­சி­ய­டைந்­தன. நலம் தொடர்பூட்டல் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் மற்றும் பல வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளில் மாற்றமின்றி சராசரியாகக காணப்பட்டன.