டிஜிட்டல் கொடுப்பனவுத்துறையை மேம்படுத்த டயலொக் மற்றும் UnionPay International கைகோர்ப்பு

14 Jan, 2026 | 03:51 PM
image

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, உலகின் மிகப்பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் கொடுப்பனவு வலையமைப்புகளில் ஒன்றான UnionPay International உடன் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

China UnionPay மற்றும் UnionPay International ஆகியவற்றின் தலைவர்  டோங் ஜுன்பெங் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில், UnionPay International இன் சிரேஷ்ட அதிகாரிகளுடன், இலங்கையின் வளர்ந்து வரும் நிதித் தொழில்நுட்ப (FinTech) முன்னோடியான Dialog Finance PLC இன் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக, Dialog Finance நிறுவனம் பல்வேறு புத்தாக்கமான பணப் பரிமாற்ற முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இது நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரத்தை அதிகரிப்பதுடன், இலங்கை நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தையும் வழங்கும். 

உலகின் முன்னணி கொடுப்பனவு வலையமைப்புகளில் ஒன்றான UnionPay International, 180-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் மிக வலுவான ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 

இடமிருந்து வலமாக, UnionPay International இன் பணிப்பாளர் ஷெங் ஜின்சுன் , Dialog Finance PLC இன் பணிப்பாளர் மற்றும் முதன்மை நிறைவேற்று அதிகாரி நசீம் முகமது, China UnionPay நிறுவனத்தின் தலைவர் டோங் ஜுன்பெங் Dong Junfeng மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர் மற்றும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

அவர்களுடன் Dialog Finance PLC இன் தலைவரும், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும முதன்மை டிஜிட்டல் சேவைகள் அதிகாரியுமான ரேணுகா பெர்னாண்டோ மற்றும் UnionPay International இன் தென்கிழக்கு ஆசியாவிற்கான பொது மேலாளர் சாய் ஹூய்மிங் Cai Huiming ஆகியோரும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49