(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொருளாதார உற்பத்தி இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்க்க முடியாது. அத்துடன் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய நிர்மாணத்துறை சங்கத்தினால் 17ஆவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிர்மாணத்துறை கண்காட்சி திறப்பு விழா இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.