LOLC திவி சவிய இரண்டாம் கட்டம் 200 பாடசாலைகளில் மீள்கட்டமைப்புடன் ஆரம்பம்

14 Jan, 2026 | 03:30 PM
image

LOLC திவி சவிய, 'நீங்களும் நாமும் நம் நாடும்' திட்டத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது, இது பேரழிவை ஏற்படுத்திய சூறாவளியிலிருந்து இலங்கையின் தொடர்ச்சியான மீட்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது, 69 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய ஆறு மாவட்டங்களிலுள்ள குடும்ப உலர் உணவு நிவாரண பொதிகளை விநியோகித்தது.

முதல் கட்டத்தின் உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, LOLC  திவி சவிய உடனடியாக அதன் இரண்டாம் கட்டத்திற்கு 2026 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முன்னேறியது, அதே முயற்சியான 'நீங்களும் நாமும் நம் நாடும்' இன் கீழ் நாடு தழுவிய பாடசாலைகள் மீள்கட்டமைத்தல் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்தது. இந்தக் கட்டம் சூறாவளியால் சேதமடைந்த 200 பாடசாலைகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, கல்வி தடையின்றி தொடர முடியும் என்பதை உறுதி செய்கிறது.

மொத்தம் ரூ.400 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டில், இந்த முயற்சி குடும்ப உலர் உணவு நிவாரண பொதிகள் விநியோகம், இரண்டாம் கட்டத்தில் பாடசாலைகளை மீள்கட்டமைத்தல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் முழுமையான மீள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. அவசர நிவாரணத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட மீட்சிக்கான மாற்றத்தைக் குறிக்கும் வகையில், கண்டி கொலம்பிஸ்ஸ வித்தியாலயத்தில் இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப விழா அடையாளமாகத் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் LOLC ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரத செயல்பாட்டு அதிகாரி  கித்சிறி குணவர்தனஇ மாகாண கல்விப் பணிப்பாளர்  நிஹால் அலஹகோன் கண்டி மாவட்டச் செயலகத்தின் மாவட்டச் செயலாளர்  இந்திக உடவத்த மற்றும் மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் மாகாணக் கல்விச் செயலாளர் மதுபானி பியசேன ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் LOLC  குழும நிறுவனங்களின் பிராந்திய மற்றும் கிளை மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள், டுழுடுஊ திவி சவியவின் உள்கட்டமைப்பு வசதியாளரான MTV செனல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திவி சவியவின் ஒவ்வொரு அத்தியாயமும், நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெரிய நெருக்கடியின் போதும் மக்களுடன் நிற்கும் LOLC  இன் நிலையான உறுதியை பிரதிபலிக்கிறது, மேலும் 'நீங்களும் நாமும் நம் நாடும்' மூலம் புதுப்பிக்கப்பட்ட வலிமையுடன் தொடரும் ஒரு அர்ப்பணிப்பு.

கண்டி கொலம்பிஸ்ஸ வித்தியாலயத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்.

 LOLC ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம செயல்பாட்டு அதிகாரி கித்சிறி குணவர்தன

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44