ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 கையடக்கத்தொலைபேசி மூன்று வகையாக அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் தனது புதிய கையடக்கத்தொலைபேசியினை அறிமுகம் செய்து வருகின்ற ஆப்பிள் நிறுவனம் இவ் வருடமும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் குறித்த கையடக்கத்தொலைபேசி அம்மாதம் 22 ஆம் திகதியே விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.