கருத்தரித்திருக்கும் தருணத்தில் பக்கவாத பாதிப்பு ஏற்படுமா...?

Published By: Vishnu

14 Jan, 2026 | 01:25 AM
image

கருவுற்றிருக்கும் இளம் தாய்மார்களில் பலருக்கு சமச்சீரற்ற ரத்த அழுத்த பாதிப்பின் காரணமாக பக்கவாத பாதிப்பு ஏற்படுமா?  என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கருத்தரித்திருக்கும் தருணத்தில் ஒரு லட்சத்தில்... முப்பது பெண்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதே தருணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை குறைந்த அளவில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் கருவுற்றிருக்கும் தருணத்தில் பத்து சதவீதமும், பிரசவ தருணத்தில் நாற்பது சதவீதமும், பிரசவம் நடைபெற்ற பின் ஆறு வாரங்களுக்குள் மீதமுள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

முகத்தில் மாற்றம், கைகள் பலவீனமடைதல், பேசுவதில் சிரமம் ஆகியவை கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்பட்டால்... உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

கடுமையான தலைவலி, வலிப்பு தாக்கங்களுக்கான நரம்பியல் அறிகுறி, உடலில் இடது அல்லது வலது பகுதியில் பலவீனத்தை உணர்தல்... போன்ற அறிகுறியை உணர்ந்தாலும் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

கருவுற்றிருக்கும் தருணத்தில் விவரிக்க முடியாத காரணங்களால் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டாலும் பக்கவாத பாதிப்பு உண்டாகும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதனால் கருவுற்றிருக்கும் தருணத்தில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டும் என வைத்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

வைத்தியர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19