தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவுடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா செவ்வாய்கிழமை (13) பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் செழுமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களை உலகளாவிய மட்டத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கில், புலம்பெயர் தமிழர் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவை பண்பாடு மற்றும் மரபு சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை பிரித்தானியாவில் நடாத்தி வருகின்றது.
அந்தவகையில் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான தைப்பொங்கலை 'தமிழர் திருநாளாக' உலகளவில் அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்சமூகப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் கூடிய 'தமிழ் மரபுத் திங்கள் விழா' ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்த மரபின் நீட்சியாக இவ்வருடத்துக்கான தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவுடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை (13) மாலை 5.00 - 9.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் அடையாளம், மரபு, பண்பாடு மற்றும் கலாசாரம் என்பவற்றுக்கான அரசியல் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்த இந்நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM