அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும், வடக்கு மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்படவேண்டும் - என்.எம்.ஆலம்  

13 Jan, 2026 | 04:04 PM
image

அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்படவேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அதற்கு காரணம் தமிழக முதல்வரே என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழகத்தில் நடைபெற்ற  அயலக தமிழர் தினம்  என்ற நிகழ்வு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தலைமையில் விமர்சையாக நடைபெற்றிருக்கிறது. இலங்கையில் இருந்து அதற்கான பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். பல விடயங்கள் குறிப்பாக தமிழால் இணைகின்ற பல விடயங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.

இது காலத்தின் தேவையாகும். உண்மையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தான் தமிழ் என்ற உணர்வையும் தமிழோடு இணையவேண்டும் என்ற அந்த ஆசையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

 உண்மையில் இரு நாடுகளை நாங்கள் எடுத்துக் கொண்டால், தமிழால் இணைவோம் என்பதற்கு பொருத்தமாக, தமிழகத்துக்கும் வடபகுதிக்கும் நிறைய உறவு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு போன்று தமிழால் இணையக்கூடிய வகையில் எந்த நாடும் இல்லை. இலங்கைக்குத் தான் அந்த வார்த்தை பொருத்தமானது.

தமிழால் இணைவோம் என்பது வார்த்தை. உண்மையில் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந்திருக்கின்றோமா?

 தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்களுக்கும் இலங்கை வடபகுதியில் இருக்கும் தமிழர்களுக்குமான உறவு தொப்புள்கொடி உறவு என்பதை நாங்கள்  ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த உறவு ரீதியாக இது ஓர் அரசியலுக்கும் மொழிக்குமானது அல்ல.

அதையும் தாண்டி வாழ்வாதாரம், ஒன்றிணைவு, அவர்களின் குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஊடாக பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும். இருந்த போதும் இங்கு நடைபெறுகின்ற விடயம் தமிழக மீனவர்களால்  வடபகுதியில் இருக்கும் மீனவர்கள்  பாதிக்கப்படுகின்றார்கள்.

இந்த நிகழ்வு தொடர்ச்சியாக பல வருடங்கள்   நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியான இந்த பாதிப்பு தொடர்பாக எந்த விதமான பேச்சுகள் அவர்களுக்கு செயற்பாட்டு வாயிலாக அந்த உறவை கட்டியெழுப்பக்கூடிய எந்த செயற்பாடும் இந்த நிகழ்வுகளில்  நடைபெறுகின்றதா?

இலங்கையில் இருந்து கலந்துகொண்டுள்ள செந்தில் தொண்டமான்  அவர்கள்  இலங்கை சார்ந்து சென்றாலும் மலையகம் சார்ந்து செல்கின்றார். மலையகம் சார்ந்த விஷயங்களை அவர் முன்னிலைப்படுத்துகின்றார். வடக்கு சார்ந்த மீனவர்கள், வடக்கு, கிழக்கில்  இருக்கின்ற மக்கள் தொடர்பாக பேசுவதற்கு அவர் அச்சப்படுகின்றார். அல்லது பேசாமல் தவிர்த்து வருகிறார்.

எனவே இலங்கையில் இருந்து செல்கின்ற பிரதிநிதிகளை நாங்கள் இலங்கை பிரதிநிதிகளாக பார்க்கிறோம். எனவே அவர் இங்குள்ள விடயங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும். அயலகத் தமிழர் தினம் என்கிற சொல்லை நாங்கள் வரவேற்றாலும், வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்படவேண்டும்.

தமிழகத்தினால் இழைக்கப்படுகின்ற அநீதிக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பு தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது. வெறுமனே தமிழக உறவை மாத்திரம் பயன்படுத்தி தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்குமான மொழி உறவை ஊக்கப்படுத்துகின்ற அதேநேரம் இங்கு மக்கள் படுகின்ற துன்பங்களையும் அவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொழில் நடவடிக்கைகள் இன்றி வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கான எந்த இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை. ஒருசில உதவிகள் வழங்கப்பட்டாலும் அவை அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

மக்கள் அரசாங்கத்தின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஓய்வெடுக்கும் நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் எமது கடற்பகுதிக்குள் வந்து சூறையாடுகின்ற செயல்பாடு இன்று வரை தொடர்கிறது.

வெறுமனே ஒரு சில படகுகள் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் வருகையை இன்று வரை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

அவர்களை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் தமிழக முதல்வரே. அவர் தான் இத்தொழிலை ஊக்குவித்து வருகிறார் என வட பகுதி மீனவர்கள் கருதுகின்றனர்.

எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாதிருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21