டெல்லியில் வளி மாசு அதிகரிப்பு ; கடும் குளிர்

Published By: Digital Desk 3

13 Jan, 2026 | 12:14 PM
image

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கட்கிழமை (12) 3 டிகிரியாக பதிவாகி இருந்தது.  இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை 4 டிகிரி என்ற அளவில் உள்ளது.

இதில், ஆயாநகர் பகுதியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரியாக பதிவாகி இருந்தது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று இரவில் பல்வேறு இடங்களிலும் குளிர் அலை பரவியது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது.

பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவாகியது. சப்தர்ஜங் நகரில் 4.8 டிகிரியாக பதிவாகி இருந்தது. அது இன்றிரவு 3 டிகிரியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று ரிட்ஜ் ஸ்டேசன் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.8 டிகிரியாகவும் இருந்தது.

டெல்லியில் வளியின் தரமும் கூட மோசமடைந்து உள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் வளி தரச் சுட்டெண் 337 ஆக உள்ளது என இந்திய மத்திய வளி மாசு  கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. 

இதனை தவிர காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களின் பல பகுதிகளிலும் கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46
news-image

பிலிப்பைன்ஸில் மண்சரிவுகளில் சிக்கி 15 பேர்...

2026-07-11 09:55:09
news-image

எனக்கு எனது ஜனம்தான் முக்கியம் -...

2026-07-10 18:24:13
news-image

மீள்பயன்பாட்டு ரொக்கெட் தொழில்நுட்பத்தில் சீனா வரலாற்று...

2026-07-10 16:48:53
news-image

ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய...

2026-07-10 13:05:16
news-image

ஸ்பெயினில் காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு,...

2026-07-10 10:32:12
news-image

சீனாவில் காலணித் தொழிற்சாலையில் பெரும் தீ...

2026-07-10 09:20:36
news-image

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம்...

2026-07-09 16:22:55
news-image

ராஜஸ்தானில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட...

2026-07-09 15:11:53