கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (13) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பாளரை பதவியிலிருந்து நீக்கி, அந்தப் பதவிக்கு வேறொருவரை நியமிக்கக்கோரி இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் 113 முதன்மை வைத்திய நிறுவனங்களில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஜனித் பெதுருஆராச்சி தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM