மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாப்பாக காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரத கடவையைக்கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இடம் பெற்றுள்ளது.
கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ் ) அமைப்பின் உதவியுடன் மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் இக்காட்டு யானையை கரையைக்கடந்து நீர் வழியாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக வாழைச்சைனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கி, கிராமங்களுக்குள் நுழைந்து கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த யானையையே இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM