பறவைகளின் முட்டைகளை சேகரித்து கரைசேர்க்க முற்பட்ட இரு மீனவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டனர்.

மன்னார் பாக்கு நீர் கடல்பரப்பில் ஒரு படகில் மீன்பிடிக்காகச் சென்ற மீனவர்கள் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்டுள்ள தீடை என அழைக்கப்படு;ம் மண்திட்டியில் புள்ளுக்குருவி என அழைக்கப்படும் ஒரு இன பறவைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை கரைசேர்க்க முற்பட்ட தலைமன்னார் கிராப்பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 18 முட்டைகளுடன் கைதுசெய்யப்பட்ட இவ்விரு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆ.கி.ஆசீர்வாதம் முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது   விசாரனைக்காக எதிர்வரும் 11.03.2016 வரை இவ்வழக்கை ஒத்திவைத்தார்.

(வாஸ் கூஞ்ஞ)