அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை!

Published By: Digital Desk 3

13 Jan, 2026 | 11:36 AM
image

ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (12) இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது,

"ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம். இதில் சுமார் 55,000 பேர் வாழ்கின்ற கிரீன்லாந்து ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்க வாய்ப்புள்ளது."

"இது நடந்துவிட்டால் அவ்வளவுதான். அமெரிக்கக் கொடியில் புதிய நட்சத்திரங்கள் (புதிய மாகாணங்கள்) சேர்வதற்கு இடமிருக்காது," என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இது அவசியம் என்பது அவர் வாதமாக உள்ளது.

கிரீன்லாந்து மீது தங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும், அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் விண்வெளி கண்காணிப்பு மையங்களை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ட்ரம்ப்பின் இந்த முயற்சிக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல' என அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வருவதால், புதிய கடல் வழித்தடங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வல்லரசு நாடுகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. 

குறிப்பாக, 2022-ல் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போருக்குப் பின்னர் ஆர்க்டிக் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டு, அப்பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32