இலங்கையில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டள்ளது.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளுத்கம, பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் மூவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு உயிரிழந்தோரின்  குடும்பங்களுக்கு இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடும் வழங்க புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் சமர்ப்பித்த சட்டமூலத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.