“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர்  தீர்மானித்துள்ளார்”என வெளியான செய்தி பொய்யானது - பாராளுமன்ற செயலகம்

12 Jan, 2026 | 07:32 PM
image

(நமது நிருபர்)

'பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன  தீர்மானித்துள்ளார்' என்ற தலைப்பில் வெளியான செய்தி அடிப்படையற்ற பொய்யான செய்தி என  சபாநாயகர் வலியுறுத்தியிருப்பதாக இலங்கை பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஊயழிர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை பாராளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும்,  அவ்வாறான ஆலோசனைகளையும் வழங்கவில்லையென்றும் இலங்கை பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், உணவறைப் பகுதிக்குள் சில ஊழியர்கள் இரகசியமாக மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர், இது தொடர்பான ஆலோசனையை வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பொய்யானது என்றும், அவ்வாறான சூழ்நிலை உருவாவதற்கு இடமளித்தமை தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகளைக் குற்றஞ்சாட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் எந்தவிதமான அடிப்படையுமற்ற  பொய்யான தகவல்கள் என்றும் பாராளுமன்ற செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21