போலந்துக்கான இலங்கைத் தூதுவர் பிரியங்கிகா தர்மசேன, ஸ்ட்.என்.பி லோகோஸ் டுவர்ஸ், வர்ஸாவ் கிளையின் தலைவரான மோனிகா ஸ்ஷ்நைடரை கடந்த 7ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்.
"ஸ்ட்.என்.பி லோகோஸ் டுவர்ஸ்" என்பது போலந்தில் செயல்படும் முன்னணி வெளிநாட்டு சுற்றுலா நிறுவனம் ஆகும். இது இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உலகளாவிய சுற்றுலா பயணங்களை நடத்தி வருகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையை கடுமையாக பாதித்த “டித்வா” புயலுக்குப் பின்னர், அந்த நிறுவனம் எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்வதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இக் கலந்துரையாடலின் போது, புயல் காலத்திலும் அதன் பின்னரும் சுற்றுலாப் பயணிகளின் கவலைகளை தீர்க்க இலங்கை அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளை தூதர் பிரியங்கிகா தர்மசேன விளக்கினார்.
அதில் அவசர உதவி தொலைபேசி சேவை அமைத்தல், சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் வெளியேற்றுதல் மற்றும் விசா கட்டணங்களை விலக்களித்தல் ஆகியவை தொடர்பிலும் விளக்கினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், போலந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதையும், போலந்து இலங்கையின் முன்னணி 12 சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக இருந்து, வெளிநாட்டு நாணய வருமானத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கி வருகின்றது என்றார்.
அத்துடன் மோனிகா ஸ்ஷ்நைடர், "ஸ்ட்.என்.பி லோகோஸ் டுவர்ஸ்" நிறுவனம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதுடன், கடந்த 25 ஆண்டுகளாக இலங்கைக்கு சுற்றுலா குழுக்களை அனுப்பி வருவதாக தெரிவித்தார்.
தங்களின் சுற்றுலா தொகுப்புகள் உயர்தரமானவை என்றும், நுணுக்கமான இரசனை கொண்ட பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்றும் அவர் விளக்கினார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்திலும் மே மாதம் வரை ஆண்டுதோறும் நான்கு முதல் ஐந்து குழுக்கள் இலங்கையைப் பார்வையிடுகின்றன. இந்த சுற்றுலாக்கள் கலாசார ரீதியாக செழுமையும் பல்வகை அனுபவங்களையும் கொண்டவை என்றும் அவர் மேலும் கூறினார்.
இதன்படி, சூறாவளிக்கு முன்பும், அதன் போதும் மற்றும் அதன் பின்னரும் இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுலா பயணங்களில் தங்களின் நிறுவனத்திற்கு எந்தவித பிரச்சினைகளும் அல்லது சவால்களும் ஏற்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM