பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு அறிவுறுத்த ஜி.எல்.பீரிஸ் முயற்சி

12 Jan, 2026 | 06:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும். இந்த சட்டவரைவை நீக்க கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரிடம் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கண்டி அஸ்கிரிய பீடத்துக்கு சென்று மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதற்காக அரசாங்கம தான்தோன்றித்தனமாக செயற்பட  முடியாது.

 பொதுமக்களுடன் எவ்விதமான வெளிப்படையான கலந்துரையாடல்களும் இல்லாமல் தான் அரசாங்கம் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்தியுள்ளது. நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக விடயங்களை கல்வி கொள்கையில் உள்ளடக்கினால் அது விளைவுகளை ஏற்படுத்தும்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்விடயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும்.

நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு  நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும், ஊடக  சுதந்திரம் அரச அடக்குமுறைக்கு உள்ளாகும். ஆகவே இந்த சட்டவரைவை நீக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09