நடிகர் ஜீவா நடிக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

12 Jan, 2026 | 05:35 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக - ஹாஸ்ய நாயகனாக - நடித்திருக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பங்கு பற்றிய முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரத்யேகமாக நடைபெற்றது.

மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள' தலைவர் தம்பி தலைமையில் ' எனும் திரைப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். திருமண சடங்கு - மணப்பெண்-  பெற்றோர்கள்-  உறவினர்கள்- சண்டை - சச்சரவு - ஆகியவற்றின் பின்னணியில் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி தை திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் குடும்பம் சார்ந்த பார்வையாளர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை வழங்கும் என உறுதியளிப்பதால்... படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றி நடிகர் ஜீவா பேசுகையில், '' இரண்டு முன் விரோதம் உள்ள குடும்பம். அவர்களின் ஒரு வீட்டு பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது. அதற்கு முதல் நாள் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனை நாயகன் உள்ளே புகுந்து, எப்படி சமாளித்து தீர்வு காண்கிறான்?  என்பதுதான் படத்தின் கதை. இந்தக் கதையை ஆறு வயது முதல் அறுபது வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பட மாளிகைக்கு வருகை தந்து ரசித்து கொண்டாடும் வகையில் நேர்த்தியான திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். பொங்கல் போன்ற விசேட தினங்களில் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் வகையில் இப்படம் தயாராகி இருக்கிறது. அனைவரும்  இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49