இன்றைய திகதியில் திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுவோர்கள் 15 சதவீதமாக உயர்ந்திருக்கிறார்கள். அத்துடன் கருவுற்றிருக்கும் பெண்கள் குறை பிரசவத்தில் குழந்தைப் பெற்றெடுப்பதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குறைபிரசவத்தை தடுக்க இயலாதா? என அனைவரும் கேட்பர்.
குறை பிரசவத்தை முழுமையாக தடுக்க இயலும். கருதரிக்கும் காலத்திலிருந்து 40 வார பேறு காலத்திற்கு பிறகு வலியெடுத்து பிரசவம் நிகழும் வரை முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று அதனை உறுதியாக பின்பற்றினால் தடுக்கலாம்.
இந்நிலையில் முதல் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தால் அவர்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தையும் குறைபிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமற்ற உணவு முறையாலும், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்காததாலும் வயிற்றில் இருக்கும் பனிக்குடம் உடைந்து குறைபிரசவம் நிகழ்வதற்கு காரணமாகிறது. அதேபோல் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் பெண்கள் தங்களின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தத்தின் அளவு, இதய நோய் தொடர்பான சிகிச்சை, சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். இவற்றில் ஏதேனும் சிறிய அளவில் பாதிப்போ பின்விளைவோ ஏற்பட்டாலும் குறைபிரசவம் நிகழக்கூடும்.
இன்றைய நவநாகரீகப் பெண்கள் திருமணமான பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தையைப் பெற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து கருசிதைவு செய்து கொள்கிறார்கள். தொடர்ந்து 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு செய்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குறை பிரசவம் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்களின் பரம்பரை மரபணு குறைபாடுகளால் குறை பிரசவம் ஏற்படலாம்.
கருவுறுதலுக்கு முன்னரும், கருவுற்றிருக்கும் போதும், கருவுற்ற பின்னரும் பெண்கள் புகை, மது மற்றும் போதைப் பொருளை பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். அதேபோல் பேறு காலத்திற்கு முன்னரும், பேறு காலத்தின் போதும், பேறு காலத்திற்கு பின்னரும் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும்.
வைத்தியர். பத்மா
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM