ராஜா வீட்டு கன்னு குட்டி - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஸ்ரீ ஆர் ஆர் மூவிஸ்
நடிகர்கள் : ஆதித் சிலம்பரசன், காயத்ரி ரெமா, தம்பி சிவன், கே பி வை சரத், வர்ஷிதா, அனு கிருஷ்ணா, மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் : A. P. ராஜீவ்
சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்கள் என்றால் ... அதற்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு என்பது குறைவாகவே இருக்கும். அத்தகைய திரைப்படங்கள் பட மாளிகையில் வெளியாவது சவாலானது என்றாலும்... சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவரும். அந்த வகையில் அறிமுக கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி இருக்கிறது 'ராஜா விட்டு கன்னு குட்டி' . இதை படமாளிகையில் காணலாமா? அல்லது டிஜிட்டல் தளங்களில் வெளியான பிறகு பார்வையிடலாமா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சிங்கப்பூரில் தனது வாழ்வாதாரத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் முரளி ( ஆதித் சிலம்பரசன்) தன் பிறந்த மண்ணான தமிழகத்திற்கு செல்கிறார். அங்கு தான் காதலித்து, கைவிட்ட காதலியை சந்திப்பதற்காக செல்கிறான். அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று கைக்குழந்தை ஒன்றும் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறான்.
இதை அறிந்த அவனது நண்பன் அவனை மனதளவில் தேற்றுவதற்காகவும், ஆறுதல் அளிப்பதற்காகவும் அவனை காதலிக்கும் தன் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். முரளியின் திருமண வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்க... நாளடைவில் தன் காதலியை பற்றிய அதிர்ச்சிகரமான உண்மையை முரளி தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு அவனுடைய அவருடைய மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன ? என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமான காதல் கதை.. அதைவிட அரதபழசான திரைக்கதை. புது முகங்கள்.. என பல அம்சங்கள் இருந்தாலும் திரைக்கதை உச்சகட்ட காட்சி வரை பார்வையாளர்களை பயணிக்க வைக்கிறது. மாடு மேய்க்கும் பெண்- யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட கதை நாயகனின் நண்பன்- என சில கதாபாத்திரங்கள் மூலமாக இயக்குநர் ஆங்காங்கே ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
காதலில் விழுந்திருக்கும் காதலர்களிடத்தில்... காதலித்துக்கொண்டிருக்கும் காதலர்களிடத்தில்... காதல் என்பது தற்போதைய காலகட்டத்தில் மேம்போக்கானது.... அடிக்கடி குரங்கு போல் மாறுகின்ற மனதை பிரதிபலிப்பது... எனும் கருத்தியல் மீதான அதீத நம்பிக்கை காரணமாக.... நாயகனின் உண்மையான... உணர்வுபூர்வமான... காதல் குறித்து நாயகி மட்டுமல்ல மற்றவர்களும் புரிந்து கொள்ளவில்லை.
காதல் ஆணின் உளவியல் வலிமையை இழக்கச் செய்யும் உணர்வுபூர்வமான காரணி என்பதை இயக்குநர் சொல்லி இருந்தாலும்... அதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் சொல்லத் தவறியதால் இந்தப் படம் கவனத்திற்கு வராமல் சென்று விட்டது.
நாயகன்- நாயகனின் காதலி- நாயகனின் நண்பன்- நண்பனின் தங்கை - என ஒவ்வொரு கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர்கள் அனைவரும்... இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்து தங்களுடைய பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார்கள்.
குறைகள் இல்லாமல் இல்லை. இது போன்ற சிறிய முதலீட்டு திரைப்படங்களின் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதையும் கடந்து இப்படத்தின் ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஆறுதல்.
ராஜா வீட்டு கன்னு குட்டி - உடைந்த வெல்லக்கட்டி











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM