கிடா சண்டையை உரத்து பேசும் 'ஜாக்கி' படத்தின் புதிய பாடல் வெளியீடு

12 Jan, 2026 | 03:58 PM
image

நடிகர்கள் யுவன் கிருஷ்ணா-  ரிதன் கிருஷ்ணா ஆகியோர் கதையின் நாயகர்களாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜாக்கி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'அலங்காரி ' எனத் தொடங்கும் புதிய பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் டொக்டர் பிரபகல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜாக்கி' எனும் திரைப்படத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ்,  அம்மு அபிராமி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன் , சரண்யா ரவிச்சந்திரன், யோகி, சாய் தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார். தமிழகத்தின் தூங்கா நகரம் என போற்றப்படும் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வரும் கிடா சண்டை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி கே 7 ஸ்டுடியோஸ் எல் எல் பி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரேமா கிருஷ்ண தாஸ்-  சி. தேவதாஸ் & ஜெயா தேவதாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 15 ஆம் திகதி தை திருநாள் அன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இடம்பெற்ற' அலங்காரி ஆலங்காரி ஆஞ்சுபுட்டாளே... குறும்பாட்டு பார்வையாலே மேஞ்சுபுட்டாளே.. ' எனத் தொடங்கும் இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் ஆர் . லவரதன் எழுத ,பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.  கிராமத்து நிலவியல் பின்னணியுடன் மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35