விற்காத காணியை விற்பனை செய்வதற்கான சூட்சும குறிப்பு...?

12 Jan, 2026 | 03:53 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் சொந்தமாக காணி இருந்தாலும் அதனை விற்பனை செய்வதற்கு கடினமான போராட்டங்களையும், எதிர்பாராத தடைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

கடந்த தசாப்தங்களில் உள்நாட்டு நெருக்கடியின் காரணமாக புலம்பெயர்ந்த பலரும் தங்களது காணிகளின்-  வீடுகளின்-  நிலை குறித்து இன்றும் அச்சத்துடன் தான் இருக்கிறார்கள்.

அந்த காணிகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் அல்லது நல்ல நோக்கத்திற்காக பாவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இவை எவற்றையும் செய்ய இயலாத சூழலில் தடைகளும், தாமதங்களும் தொடர்ந்து ஏற்படுகிறது.

இந்நிலையில் இத்தகைய நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்குகிறார்கள். இதனை முழுமையாக பின்பற்றினால் எம்முடைய காணி விற்பனை நல்லபடியாக நிறைவடையும் என்பது உறுதி.

எந்த குறையும் இல்லாத வீடு கட்டுவதற்குரிய மூன்று செங்கற்களை வாங்கிட வேண்டும். யானை சாணம்- பசுவின் சாணம் -காளை மாட்டின் சாணம்- இந்த மூன்று பொருளையும் தொடர் தேடலில் சேகரித்து, உலர வைத்து, பொடியாக்கி கொள்ளுங்கள்.

இதனைத் தொடர்ந்து ஒரு வாளியில்  சாதாரண நீரை வைத்து அதில் மூன்று கற்களையும் நனைத்து உலர வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து அந்த நீரில் மஞ்சள் பொடியைக்கலந்து மீண்டும் அந்த மூன்று கற்களையும் நனைத்து உலர வைத்து விடுங்கள்.

அதன் பிறகு யானை சாண பொடி- பசுவின் சாண பொடி- காளை மாட்டு சாண பொடி- ஒவ்வொரு பொடியையும் போட்டு, அதில் மூன்று கற்களையும் நனைத்து உலர வைக்க வேண்டும்.

இதன் பிறகு இந்த மூன்று கற்களையும் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு பரணி நட்சத்திர நாளன்று எடுத்துச் செல்லுங்கள். மூன்று கற்களையும் விநாயகரின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து மனதார பிரார்த்தித்து, அதன் பிறகு அந்த மூன்று கற்களையும் வீட்டுக்கு எடுத்து வர வேண்டும்.

வீட்டிற்கு எடுத்துவரப்பட்ட அந்த மூன்று  செங்கற்களையும், ஒரு தாமரை இலை மீது நேராக நிற்க வைத்து, மல்லிகை பூவை சாற்றி, தொடர்ந்து 48 நாட்கள் வெற்றிலை- பாக்கு -அரிசி பொரி-  அவல் - சிறிதளவு பனைவெல்லம் - ஆகியவற்றை நிவேதனமாக படைத்து வணங்கிட வேண்டும்.

அதன் பிறகு 48 நாட்களுக்குப் பிறகு இந்த மூன்று செங்கற்களையும் விற்பனையாகாத அல்லது தடையாக உள்ள உங்களது காணியில் வைப்பதற்கு முன் சிறிது தண்ணீர் தெளித்து, பிறகு மஞ்சள் தெளித்து, இந்த மூன்று செங்கற்களையும் அங்கு வைத்து வணங்கிட வேண்டும்.

அதன் பிறகு உங்களது காணி நீங்கள் நினைப்பதை விட கூடுதல் விலைக்கு எந்த தடையும் இல்லாமல் விற்பனையாகி உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் தோஷத்தை நீக்கும் பிரத்யேக வழிபாடு

2026-02-12 14:48:42
news-image

வீட்டில் உள்ள எதிர்மறையான தாக்கத்தை நீக்குவது...

2026-02-11 17:08:28
news-image

ஆடைகளில் தீப்பொறி பட்டால்...!?

2026-02-10 16:19:39
news-image

அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் அற்புத ஆன்மீகப் பொருள்..!?

2026-02-09 18:22:20
news-image

வேலைக்கு செல்லும் பெண்களின் தற்காப்பிற்குரிய பிரத்யேக...

2026-02-07 15:12:42
news-image

புதன் பகவானின் ஆசியை பெறுவதற்கான பிரத்யேக...

2026-02-06 16:50:17
news-image

சனியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் பிரத்யேக மூலிகை

2026-02-05 16:05:14
news-image

பரிகாரங்கள் பலனளிப்பதற்கான சூட்சும விதிகள்!

2026-02-04 15:08:13
news-image

வெற்றிகளை அள்ளித் தரும் பிரத்யேக மந்திர...

2026-02-04 04:11:27
news-image

செல்வ வளத்தை மேம்படுத்தும் பிரத்யேக குறிப்பு

2026-02-02 15:21:34
news-image

பெப்ரவரி மாத ராசி பலன்கள் -...

2026-02-02 08:51:22
news-image

சனி பகவானின் பரிபூரண அருளை பெறுவதற்கான...

2026-01-31 16:18:57