ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு மகிழ்ந்தார் இந்திய பிரதமர் மோடி

Published By: Digital Desk 3

12 Jan, 2026 | 05:25 PM
image

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்,  ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து அனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.

இந்தியாவின், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சா்வதேச பட்டத் திருவிழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

மகர சங்கராந்தியை முன்னிட்டு சபரிமதி ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் நடைபெறும் சா்வதேச பட்டத் திருவிழா இன்று திங்கட்கிழமை (12) காலை ஆரம்பமானது.

இந்த திருவிழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து அனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு ஆரம்பித்து வைத்தனர்.

இந்த விழாவில், 50 நாடுகளைச் சேர்ந்த 135 சர்வதேசப் பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 65 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 871 உள்ளூர் பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸை சபா்மதி ஆசிரமத்தில் இன்றையதினம் காலை பிரதமர் மோடி வரவேற்றார். 

இருவரும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய பின்னர், அங்குள்ள பார்வையாளர்கள் கையேட்டில் கையொப்பமிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32