“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு  கியூபா ஜனாதிபதி பதிலடி 

12 Jan, 2026 | 03:50 PM
image

“காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez)  தெரிவித்துள்ளார். 

“இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் “காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். 

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கியூபா ஜனாதிபதி மேற்கண்டவாறு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மனித உயிர்கள் உட்பட அனைத்தையும் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக அதிகாரமும் இல்லை. கியூபாவின் மக்கள் இறையாண்மையுடன் தங்களுக்கான அரசியல் மாதிரியை தேர்வு செய்வதை பொறுக்க முடியாமல் நமது நாட்டின் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள். 

கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு புரட்சியை குறை  கூறுபவர்கள் நாக்கை அடக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகளின் பலனை இப்போது அனுபவித்து வருகிறது. 

கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. கியூபா ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அது 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கியூபா யாரையும் அச்சுறுத்துவதில்லை. கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18