வவுனியா, வேப்பங்குளத்தில் நேற்று இரவு துவிச்சக்கரவண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டி மீது  வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு அருகே அதே வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் துவிச்சரவண்டியினை செலுத்திச் சென்ற முதியவரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா  போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.