உள்நோக்கி வளரும் கால் நக பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

10 Jan, 2026 | 05:54 PM
image

எம்மில் பலருக்கும் நடந்து செல்லும்போது அல்லது மாடி படியில் ஏறும் போது எதிர்பாராமல் லேசாக இடித்துக்கொண்டாலும் காலில் வலி ஏற்படும்.

குறிப்பாக கால் கட்டை விரலில் வலி அதிகமாக இருக்கும். இத்தகைய பாதிப்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும்... வைத்தியர்கள் இன்குரோயிங் டோநெய்ல் என மருத்துவமொழியில் குறிப்பிடப்படும் உள்நோக்கி வளரும் கால்நக பாதிப்பும் ஒரு காரணம் என விவரிக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்மில் சிலருக்கு அவர்களுடைய கால் விரல்களில் உள்ள குறிப்பாக கால் கட்டை விரலில் உள்ள நகங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய நிலைக்கு சுகாதார துறையில் உள்நோக்கி வளரும் கால் நகம் என குறிப்பிடப்படுகிறது.

அதாவது கால் நகத்தின் இரண்டு புறங்களிலும் உள்ள மென்மையான சதை... உள்நோக்கி வளர்கிறது. இதனால் வலி, வீக்கம், தோல் அழற்சி, தொற்று பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்..... பக்க விளைவுகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

சொக்ஸ் அணிந்து நடந்தாலும் சிலருக்கு கால் நகத்தில் வலி உண்டாகும். வீக்கம், தொற்று பாதிப்பு ஆகியவை ஏற்பட்டிருந்தால்.. உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை சிகிச்சை பெற வேண்டும்.

வைத்தியர்கள் கிளினிக்கல் டயகனைஸ் மூலம் இதன் பாதிப்பை அவதானித்து சிறிய அளவிலான நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

அதே தருணத்தில் நீரழிவு நோயாளி ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அதற்கான சத்திர சிகிச்சைக்கு முன்னதாக சில பரிசோதனைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறார்கள் அதன் பிறகு சத்திர சிகிச்சை மூலமாகவே அதற்கும் நிவாரணம் அளிக்கிறார்கள்.

வைத்தியர் பாலசுப்பிரமணியன் - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41