இலங்­கை­யுடன் தொழில்­நுட்ப ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள தாம் தயாரா இருப்­ப­தா­கவும் அதன் ஊடாக இலங்­கைக்கு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொலைத்­தொ­டர்பு துறையில் புதிய அம்­சங்­களை அறி­மு­கப் ­ப­டுத்த எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடிஸ் தெரி­வித்­துள்ளார்.

மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடி­ஸுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யாடல் சுவிட்­ஸர்­லாந்தின் டலோஸ் நகரில் இடம் பெற்­றது. இந்த கலந்­து­ரை­யா­டலின் போதே ஜோன் பிலிப் கோடிஸ் மேற்­கண்ட கருத்தை தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இந்த உடன்­ப­டிக்­கையின் ஊடாக இலங்­கையில் புதிய தலை­மு­றை­யி­லான தொழில் நுட்­பத்தை அறி­மு­கப்­ப­டுத்­தவும் தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூக பாது­காப்பு துறையில் டிஜிட்டல் மயப்­ப­டுத்­து­வ­தற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்க

எதிர்­பார்த்­துள்ளோம் இது குறித்து ஆராய்­வ­தற்கு விஷேட நிபுனர் குழு ஒன்றை மிக விரைவில் இலங்­கைக்கு அனுப்ப எதிர்­பார்த்­து­ள்ளோம்.

தொழில்நுட்ப முன்­னேற்­றத்­தினால் மக்­க­ளுக்கு நேர­டி­யாக தகவல் தொடர்­பா­டலை மேற்­கொள்ள கூடி­ய­தாக உள்­ளது. இந்த வச­தியை சமூக முன்­னேற்­றத்­திற்­காக பயன்­ப­டுத்­திக்­கொள்­வது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

விஷேடமாக கல்வி, நிதி மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்த இந்த இணைப்பை பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.