வரி விதிப்பில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன. நேரடி வரியை 40 வீத­மாக அதி­க­ரிப்­ப­துடன் மறை­முக வரியை 60 வீத­மாக குறைக்கும் திட்டம் எம்­மிடம் உள்­ளது. 

Image result for ranil virakesari

அடுத்த இரண்டு ஆண்­டு­களல் இந்த நிவா­ர­ணத்தை மக்கள் உணர முடியும். அனை­வரும் வரி செலுத்த வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என நிதி பிர­தி­ய­மைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். 

விகாரை, கோவில், பள்ளி, ஆலயம் ஆகி­ய­வற்றின் புண்­ணிய நிதியில் எந்த வரியும் அற­வி­டப்­ப­டாது என­வும அவர் குறிப்­பிட்டார். 

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

இறை­வரிச் சட்­ட­மூலம் நாளை (இன்று ) பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த சட்­ட­மூலம் தொடர்­பி­லான வாக்­கெ­டுப்பு அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் நடத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் இது குறித்த திறந்த விவா­தத்தை நடத்த முடியும். பொது மேடை­களில்  சட்­ட­மூலம் குறித்து கருத்து வெளி­யிடும் நபர்கள் பார­ளு­மன்­றத்தில் பொது விவா­தத்தில் கலந்­து­கொண்டு முரண்­பா­டு­களை தெரி­விக்க முடியும். அர­சாங்கம் என்ற வகையில் விவா­தத்தை நடத்த   நாம் தயா­ராக உள்ளோம். எனவே இதன் மூல­மாக குழப்­பங்­களை தெளி­வு­ப­டுத்த முடியும். 

 நாம் அர­சாங்கம் அமைத்து இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இது­வரை நாட்டில் நெருக்­க­டி­யான பொரு­ளா­தார கொள்கை ஒன்றே காணப்­பட்­டது. கடந்த ஆட்­சியின் போது முன்­வைக்­கப்­பட்ட  நெருக்­கடி நிலை பொரு­ளா­தார கொள்­கைக்கு மாறாக நாம்  பல்­வேறு  மாற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். கடந்த கால கடன்கள், முறை­யற்ற பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கைகள் என்­பன எமது நாட்டின் பொரு­ளா­தார  ஸ்திரத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி­யுள்­ளன. 

எனினும் நாம் கடந்த கால கடன்­களை செலுத்தி வரும் நிலையில் எதிர்­கா­லத்தில் கடன்­களை சரி­யாக பூர்த்தி செய்யும்  ஸ்திர­மான வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்­கி­யுள்ளோம். குறிப்­பாக அம்­பாந்­தோட்டை துறை­முக திட்டம் மூல­மாக 400 பில்­லியன் டொலர் இலாபம் கிடக்கும் வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். 

எனினும் இன்று ஆசிய நாடு­களின் பொரு­ளா­தார  ஸ்திரத்­தன்மை வீழ்ச்சி கண்­டுள்­ளது. இந்­தியா, சீனா ஆகிய நாடு­களின் பொரு­ளா­தார உறு­தித்­தன்மை வீழ்ச்­சியை காட்­டு­கின்­றது. ஆகவே இதன் தாக்கம் இலங்­கை­யையும் பெரு­ம­ளவில் பாதிக்கும் என்­பது தெரிந்த விட­ய­மே­யாகும். எனினும் அர­சாங்­கத்தின் சரி­யான பொரு­ளா­தார கொள்கை மூல­மாக எம்மால் சில நிவா­ர­ணங்­களை வழங்க முடி­யு­மா­கி­யுள்­ளது. குறிப்­பாக   சாதா­ரண மக்­களை இல­கு­வாக சென்­ற­டையும் வகையில் சாதா­ரண வாக­னங்­களின் விலை­களின் மாற்­றங்­களை கொண்­டு­வந்­துள்­ளமை  மற்றும் அனை­வரும் இன்று இணை­யங்­களின் பாவ­னையில் உள்ள நிலையில் அதற்­கான வச­தி­களை பெற்­று­கொ­டுத்­தமை ஆகி­ய­வற்றை  கூறலாம். 

அதற்கு அப்பால் மேலும் சில முக்­கிய மாற்­றங்­களை கொண்­டு­வ­ர­வேண்­டிய தேவை உள்­ளது. வரி திட்­டத்­திலும் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. இலங்­கையில் நேரடி வரியை விடவும்  மறை­முக வரியே அதி­க­மாக அற­வி­டப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் சாதா­ரண மக்­க­ளிடம் அற­வி­டப்­படும் மறை­முக வரியே (82 வீதம் ) அதி­க­மாக அற­வி­டப்­ப­டு­கின்­றது. நேரடி வரி­யாக  18வீதம் அற­வி­டப்­ப­டு­கின்­றது இந்த  தொகை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். நேரடி வரியை 40 வீத­மாக அதி­க­ரிப்­ப­துடன் மறை­முக வரியை 60 வீத­மாக குறைக்கும் திட்டம் எம்­மிடம் உள்­ளது. அடுத்த இரண்டு ஆண்­டு­களில்  இந்த நிவா­ர­ணத்தை மக்கள் உணர முடியும். 

 விகாரை, கோவில், ஆல­யங்கள், பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றில் புண்­ணிய காரி­யங்­களில் கிடைக்கும் நிதியில் எந்த வரியும் அற­வி­டப்­போ­வ­தில்லை. இதில் ஆலய நிர்­வாகம் சந்தேகங்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இதில் மாற்று கருத்துகள் இல்லை. அனைவருக்கும் சமமான சட்டம் நீதி முன்னெடுக்கப்படும். சாதாரண மக்களுக்கு மட்டுமே அதிக வரி அறவிடுவதும் செல்வந்த பிரபுக்கள் வர்க்கம் குறைந்த வரி செலுத்துவதும் ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும்  என்றார்.