ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடாகும்.
குறிப்பாக, ஒரேஷ்னிக் ஏவுகணை கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் பகுதியில் பரிசோதிக்கப்பட்டு, கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்போது நடத்தப்பட்ட தாக்குதல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM