வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

10 Jan, 2026 | 11:10 AM
image

கலை,இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு   வளர்ந்து வரும்  இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைப்பதை பிரதானமான செயற்பாடகக் கொண்டு  தலைநகரில் கடந்த  45ஆண்டுகளாக  பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி 46ஆவது  ஆண்டுக்குள்  காலடி பதிக்கின்றது.

1995ஆம் ஆண்டு  முதல்  இளையோருக்கான கலை, கலாசாரப் போட்டிகளை நடத்தி  விருதளித்து வரும் இந்த  அமைப்பு  இதன் 20ஆவது  ஆண்டின் தொடராக கலாமித்ரா விருது விழாவை  வரும் 30 ஆம் திகதி கொழும்பு-13  செட்டியார் தெருவில்  அமைந்துள்ள  கல்யாண முருகன் மண்டபத்தில்  மாலை 6மணிக்கு  நடத்துகின்றது.

இவ் விழாவிற்கு அமைப்பின்  நிறுவனர்  ராதாமேத்தா  தலைமை ஏற்கிறார். இதில் பிரதம அதிதியாக  ஹாசிம் உமர் பவுண்டேஷன் அமைப்பின்  நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து  சிறப்பிக்கின்றார்.

இந் நிகழ்வினில் கலை,கலாசார  போட்டிகளில் பங்கேற்று  வெற்றி  பெற்ற 25 பேருக்கு  வெற்றியாளர் விருதும்  கலை,இலக்கிய  படைப்பாக்கங்களில் தொடர்ந்து  பங்களிப்பு  செய்து வரும் பத்துதுறைகளை சார்ந்த  பத்துபேருக்கு கலாமித்ரா  விருதும்  சமூக மற்றும் கலை ஊடகப்பணிகளில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் 15பேருக்கு  சிறப்பு  விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வை புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகம்  அதன் தலைவர் ஷண்மு, செயலாளர்  சி.அழகேஸ்வரன்  மற்றும்  பொருளாளர் ரவிராம் ஆகியோரின்  ஏற்பாட்டில் நிகழ்வுகள் ஓருங்கமைக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27