கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடப்பக்க கைகளில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையிலேயே கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வெட்டுச் சம்பவம் ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேலதிக தகவல் இதுவரை கிடைக்கப்பெற்றவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்  தெரிவிக்கின்றார்.