பெரியமுல்லை - ஏத்துகல ரயில் கடவைக்கு அருகில், போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான ஜீப் வாகனமொன்றை ஆய்வு செய்தபோது, அதில் பயணித்த நபர் 10 கிராம் கஞ்சா, 01 கிராம் கொக்கெய்ன் மற்றும் 100 போதையூட்டும் பொருட்களை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, குறித்த ஜீப்ரக வாகனம் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின்போது, அவர் தங்கியிருந்த அறையில் 29 கிராம் 240 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள் மற்றும் 02 கிராம் 230 மில்லிகிராம் அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் சந்தேகநபருக்குச் சொந்தமான ஒரு மருந்துக் கடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1000 போதைமாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM