மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று மாலை வரை வெளியேறாமல் பல்கலைகழக நிர்வாக கட்டிடத்தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைகழக வளாகத்தில் தரித்து நிற்கும் மாணவர்ககளில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியை பல்கலைகழக வளாகத்திற்குள் கொண்டு செல்ல முற்பட்ட போதே மாணவர்களுக்கும்  காவலாளிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பபட்டுள்ளளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.