நீதித்துறை சுதந்திரம் பற்றி பேச நாமல் ராஜபக்ஷுக்கு உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

09 Jan, 2026 | 05:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நீதித்துறை சுதந்திரம் பற்றி நாமல் ராஜபக்ஷ பேசுகிறார்கள்.  இவர்களது ஆட்சியில்  முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை எவ்வாறு பதவி நீக்கினார்கள்  என்பதை முழு நாடும் அறியும். உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உள்ளாகியுள்ளவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தான் இன்று நீதிமன்றத்தை விமர்சிக்கிறார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அல்லது முஸ்லிம் காங்கிரசோ நீதிமன்றத்தை விமர்சிப்பதில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற கடை,அலுவலக ஊழியர் ( ஊழியத்தையும், வேதனத்தையும்,ஒழுங்குப்படுத்தல்)  சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதன் அதிகாரங்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் சட்ட ஏற்பாடுகள், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பாராளுமன்ற மரபுகள் ஊடாக விரிவான விளக்கமளித்துள்ளார்.

 நாட்டின்  முத்துறைகளான சட்டத்துறை, நீதித்துறை , நிர்வாகத்துறை ஆகிய துறைகள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக செயற்பட வேண்டும்.இருப்பினும் ஒரு துறைக்குள் பிறிதொரு துறை தலையிட கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நாட்டில் வலுவேறாக்க கொள்கை முறையாக செயற்படுத்தப்படவில்லை. நிறைவேற்றுத்துறை ஏனைய துறைகளை ஆக்கிரமித்திருந்தது.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்துடன் முரண்பட்ட காரணத்துக்காக அப்போதைய பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பாராளுமன்றத்தால் முறையற்ற வகையில் நீக்கப்பட்டார். இவ்வாறான பின்னணியில் தற்போது  நீதிச்சேவை ஆணைக்குழு பற்றி ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை  நியமிக்குமாறு எதிர்க்கட்சியினர் கோருகிறார்கள்.இது முற்றிலும் தவறானது.

நீதிதுறை சுயாதீனமாக செயற்படுகிறது என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் ஏன் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க கோர வேண்டும். இன்றும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை இவர்களால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதனால் தான்  இவர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, தாஜூதின்,  ஏனைய படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் பற்றி முறையான விசாரணைகள்  மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக பல்வேறு அரசாங்கங்களில் அதிகாரத்தில் இருந்தவர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. 

நீதித்துறை சுதந்திரம் பற்றி நாமல் ராஜபக்ஷ பேசுகிறார்கள்.  இவர்களது ஆட்சியில்  முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை எவ்வாறு பதவி நீக்கினார்கள்  என்பதை முழு நாடும் அறியும். உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். 

தமக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் இவர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். குற்றத்தை மூடிமறைப்பதற்கு இவர்கள் பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள். தேசபந்து தென்னக்கோன் அதில் ஒரு வடிவம்.

 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உள்ளாகியுள்ளவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தான் இன்று நீதிமன்றத்தை விமர்சிக்கிறார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அல்லது முஸ்லிம் காங்கிரசோ நீதிமன்றத்தை விமர்சிப்பதில்லை. நீதிச்சேவை ஆணைக்குழு பற்றி விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவில்லை . ஆகவே எதிர்க்கட்சிகளின் குறுகிய நோக்கத்துக்கு எம்மால் இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02