புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு நிவாரணம் அளிக்க தற்பொழுது ஏராளமான நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி வருகிறது. இந்நிலையில் ரேடியோநியுக்குலைட் தெரபி எனும் நவீன கதிரியக்க சிகிச்சை அறிமுகம் ஆகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடலின் உள் உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அதற்கு சிகிச்சை அளிப்பது சவாலானதாக இருக்கும். குறிப்பாக சத்திர சிகிச்சைக்கு முன்னதாகவோ அல்லது சத்திர சிகிச்சைக்குப் பிறகு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்குவார்கள்.
இந்நிலையில் தைரொய்ட், புரோஸ்டேட் , கல்லீரல் மற்றும் நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது ரேடியோநியுகுலைட் எனும் நவீன கதிரியக்க சிகிச்சை பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட பிறகு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், உடலின் வேறு பகுதியில் பரவி இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய சிகிச்சையின் போது ரேடியோ ஐசோடோப் எனும் மூலக்கூறுடனான கதிர் வீச்சை கீமோதெரபி எனும் சிகிச்சையை போல் எம்முடைய நரம்புகளின் வழியாக குருதி ஓட்டத்தில் செலுத்துகிறார்கள்.
இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் பயணம் செய்து உடல் முழுவதும் உள்ள செல்களை சென்றடைந்து, இந்த கதிரியக்க பொருட்கள் நோயுற்ற செல்களை குறி வைத்து தாக்கி அழிக்கிறது. இதனால் பக்க விளைவுகளும் குறைகிறது. புற்றுநோயின் தீவிரமும் குறைகிறது.
இத்தகைய ரேடியோநியுகுலைட் சிகிச்சையிலும் எந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் கதிர்வீச்சு சிகிச்சையை நிர்ணயித்து, செலுத்தி நிவாரணம் வழங்குகிறார்கள்.
வைத்தியர் கார்த்திகேயன் தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM