(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அல்லது சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பாரபட்சம் பார்க்காமல் சாட்சிகளின் அடிப்படையிலே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேராவினால் வினவப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அஜித் பெரேரா தனது கேள்வியில் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டுவரை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீளப்பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? மேற்படி வழக்குகளில் மீண்டும் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை யாது என கேட்டிருந்தார்.
அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினாலும் சட்டமா அதிபரினாலும் மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் மீளாய்வு செய்து அதற்கமைவாக வழக்குகளை மீள தாக்கல் செய்வதாக எமது வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதனடிப்படையில், 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டுவரை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகள் மீளாய்வு செய்யப்பப்டடு, 65 வழக்குகளை மீள தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 34 வழக்குகளை மீள தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 வழக்குகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன எனறார்.
அதனைத் தொடர்ந்து அஜித் பி பெரேரா தனது மேலதிக கேள்வியின்போது, கடந்த காலங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த, பாரியளவில் பேசப்பட்டுவந்த பல வழக்குகள் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அல்லது சட்டமா அதிபரினால் தொழிநுற்ப கோளாறு என்ற அடிப்படையில் மீளப்பெறப்பட்டிருந்தன.
தற்போது அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகளில் 65 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் பாரதூரமான நீதி மோசடியுடன் தொடர்பான வழக்குகள் எதுவும் மீள தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறான வழக்குகளை மீள தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேட்கிறேன் என்றார்.
அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், 102 வழக்குகளில் 65 வழக்குகளை மீள தாக்கல் செய்துள்ளதுடன் இன்னும் 3 வழக்குகள் தொடடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகும்.
இந்த சபையில் இருக்கும் மற்றும் முன்னர் இருந்த பலருக்கு எதிராக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக பாரபட்சம் பார்த்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் குறுக்கு கேள்வி ஒன்றை எழுப்பிய அஜித் பி பெரேரா எம்.பி. குறிப்பிடுகையில், பாரபட்சம் பார்க்காமல் செயற்பட்டதாக தெரிவித்தீர்கள்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆளைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு தினங்களில், அவருக்கு இருந்த ஜனாதிபதி சிறப்புரிமை அடிப்படையில் அந்த வழக்கு மீளப்பெறப்பட்டது, தற்போது அவருக்கு அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் அந்த வழக்கை மீள தாக்கல் செய்ய முடியும்.
அதேபோன்று முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கு உங்களது காலத்தில் மீளப்பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தவறை ஏற்றுக்கொள்வதும் இல்லை. செலுத்துவதும் இல்லை என அவர் தெரிவிக்கும்போது, வழக்கு மீள பெறப்பட்டது. அதனால் மீள வழக்கு தாக்கல் செய்யும்போதும் தெரிவுசெய்யப்பட்டே வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையே இடம்பெறுகிறது என்றார்.
அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், நாங்கள் யாரையும் பாதுகாப்பதாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுத்துச்செல்வதில்லை. யாரையும் பாதுகாக்க எமது அரசாங்கம் கட்டுப்பட்டு இல்லை.
முன்னர் அவ்வாறு செயற்பட்டதுபோல் நாங்கள் செய்யாமல் முறையாக நடவடிக்கை எடுக்கும்போது, எங்களை பார்த்து, யாரை பாதுகாக்க செயற்படுகிறீர்கள் என கேட்பது ஒரு நகைச்சுவையாகும். அதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை. சாட்சிகளின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM