முல்லைத்தீவு சிறுமியின் மரணம் குறித்து விசாரணை - நளிந்த ஜயதிஸ்ஸ

09 Jan, 2026 | 05:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி குகனேசன் டினோஜாவின் மரணம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த போக்கால்  நேர்ந்ததா, ? என்பது தொடர்பில் விசாரணைகள்  மேற்கொள்ளப்படுகிறது. முதுழுமையான  விபரம்  விரைவில் வெளியிடப்படும் என  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற  நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் பாராளுமன்ற    உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுமி குகனேசன் டினோஜா உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த விடயம்  தொடர்பில் கேள்விகளை முன்வைத்தார்.

தொடர்ந்து   கேள்விகளை  முன்வைத்த   அர்ச்சுனா , குறித்த சிறுமி முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி, நேரம். அனுமதிக்கப்பட்ட போது வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்,அந்த சிறுமி குழந்தைகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நேரம்,அந்த வைத்தியசாலையில் இருக்கும் சிறப்பு வைத்தியர்கள், சிறுமியின்  மரணம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் உள்ளிட்டவை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

2025 டிசம்பர் 21ஆம் திகதி இரவு 7.20 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். இது தொடர்பில் வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்துள்ளது.

 இதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட விசாரணைகள் நடக்கின்றன. இந்த மரணமானது வைத்தியசாலை ஊழியர்களின் அசந்தமந்த போக்கால் நடந்ததா? என்று விசாரணைகள் நடக்கின்றன. இது தொடர்பில் விசாரணைகள் நடப்பதால் விசாரணைக்கு பாதிப்பில்லாவாறு அறிக்கைகளை எதிர்வரும் நாட்களில் தருகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05