(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் சுமார் 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படுகின்றன நிலையில் இந்த வேலையில்லாப் பட்டதாரிகளையும் பயன்படுத்தி இந்தியாவைப் போல அனர்த்த கால படையணியை ஸ்தாபிக்க வேண்டும் என எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோல் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
காலநிலை மாற்றங்கள் நிகழும் போது அனர்த்த முகாமைத்துவ வழிமுறை முழுமையாக மாற வேண்டும். அனர்த்த முகாமைத்துவத் துறைக்கென பிரத்தியேகமான அமைச்சொன்றை ஸ்தாபித்து, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், வளிமண்டயலவியல் திணைக்களம் போலவே தேவையான புதிய நிறுவனங்களையும் ஸ்தாபித்து இவற்றை இந்த அமைச்சின் கீழ் கொண்டு வந்து, இதனைப் பலப்படுத்த வேண்டும்.
அவ்வாறே, புதிய இடர் முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சுமார் 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படுகின்றனர், இவர்களுக்கு இந்தத் துறைகளில் முறையான பயிற்சிகளை வழங்கி, இந்தியாவைப் போல அவசரகால படையணியை ஸ்தாபிக்க வேண்டும்.
2000 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மொனாச் பல்கலைக்கழகம், 9 நாடுகளில் 217 சூறாவளிகள் தொடர்பில் மேற்கோண்ட ஆய்வின் பிரகாரம், சுமார் 150 இலட்சம் இறப்புகள் இடம்பெற்றுள்ளன.
சூறாவளிகளுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் இறப்புகள், சூறாவளிகளால் ஏற்படும் இறப்புகளை விட அதிகம் என்று தெரியவந்துள்ளதால், புதிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM