நியூ ஸ்டார்ஸ் - சோண்டர்ஸ் அணிகள் மோதும் மிகவும் பரபரப்பான போட்டி இன்று

09 Jan, 2026 | 02:13 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் ஏ குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் நியூ ஸ்டார் மற்றும் சோண்டர்ஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான மிக முக்கிய போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று (9) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

தனது முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டி 19 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்று முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ள நியூ ஸ்டார் கழகம் இன்றைய போட்டியில் தனது வெற்றி அலையைத் தொடரும் என நம்பப்படுகிறது.

அதேவேளை, 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுடன் 7 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்திலுள்ள சோண்டர்ஸ் கழகம் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்க முடியாது என்பதுடன் நியூ ஸ்டார் கழகத்தின் வெற்றி அலைக்கு முடிவு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உள்ளூர் கால்பந்தாட்டத்தில் போராட்டக் குணத்துக்கு பெயர் பெற்ற சோண்டர்ஸ் கழகம், இன்றைய போட்டியில் எதிரணியான நியூ ஸ்டார் கழகத்துக்கு பலத்த சவாலாக விளங்கும் என்பது உறுதி.

எவ்வாறாயினும் பாடசாலை அணிக்கும் தனது சொந்த கால்பந்தாட்டப் பயிற்சியகத்துக்கும் பயிற்றுநராக இருந்துவரும் முன்னாள் தேசிய வீரர் மொஹமத் பஸால், ஒரு சிறந்த வீரராக நியூ ஸ்டார் அணியை வழிநடத்தி வெற்றிபெறச் செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

சம்பியன்ஸ் லீக்கில் அவர் 4 போட்டிகளில் 5 கோல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.

இப் போட்டிக்கு முன்னதாக இதுவரை ஒரு வெற்றியைத் தானும் ஈட்டாமல் இருக்கும் நாவலப்பிட்டி கிறிஸ்டல் பெலஸ் கழகமும் இலங்கை போக்குவரத்துச் சபை கழகமும் முதலாவது வெற்றியைக் குறிவைத்து ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இப்போட்டி இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14