சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை 4 - 1 என கைப்பற்றியது அவுஸ்திரேலியா; வெற்றியுடன் விடைபெற்றார் உஸ்மான் கவாஜா

Published By: Vishnu

08 Jan, 2026 | 11:26 PM
image

(நெவில் அன்தனி)

சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

160 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் கடைசி நாளான வியாழக்கிழமை தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது.

142 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜேக்கப் பெத்தல் மேலும் 12 ஓட்டங்களைப் பெற்று 154 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

பின்வரிசையில் ப்றைடன் கார்ஸ் 16 ஓட்டங்களையும் மெத்யூ பொட்ஸ் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக், போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இலகுவான 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்த பின்னரே வெற்றி இலக்கை கடந்தது.

ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

இதேவேளை இந்த டெஸ்ட் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உஸ்மான் கவாஜா தனது 39ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்றார்.

88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஜா 16 சதங்கள், 28 அரைச் சதங்களுடன் 6229 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 384 (ஜோ ரூட் 160, ஹெரி ப்நூக் 84, ஜெமி ஸ்மித் 46, மைக்கல் நேசர் 60 - 4 விக்., ஸ்கொட் போலண்ட் 85 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 93 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவத இன்: சகலரும் ஆட்டம் இழந்து 567 (ட்ரவிஸ் ஹெட் 163, ஸ்டீவன் ஸ்மித் 138, போ வெப்ஸ்டர் 71 ஆ.இ., மானுஸ் லபுஸ்ஷேன் 48, கெமரன் க்றீன் 37, ஜொஷ் டங் 95 - 2 விக்., ப்றைடன் கார்ஸ் 130 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 95 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 342 (ஜேக்கப் பெத்தெல் 154, பென் டெக்கட் 42, ஹெரி ப்றூக் 42, ஜெமி ஸ்மித் 26, போ வெப்ஸ்டர் 64 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 72 - 3 விக்., ஸ்கொட் போலண்ட் 46 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 160 ஓட்டங்கள் - 165 - 5 விக். (மானுஸ் லபுஸ்ஷேன் 37, ஜேக் வெதரோல்ட் 34, ட்ரவிஸ் ஹெட் 29, ஜொஷ் இங்லிஸ் 42 - 3 விக்.)

ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்.

தொடர்நாயகன்: மிக்செல் ஸ்டாக்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45
news-image

மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி...

2026-08-09 11:13:57
news-image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர்...

2026-08-08 23:22:32
news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51