வெனிசுவெலா ஜனாதிபதியை கைது செய்து நாடு கடத்தியமை ஜனநாயக விரோத செயற்பாடு - பிமல் ரத்நாயக்க

08 Jan, 2026 | 07:09 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

 அமெரிக்காவின் இறையான்மைக்கு எதிராக வெனிசுவேலா ஒருபோதும் செயற்படவில்லை.  ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை அமெரிக்கா   கைது செய்துள்ளமை ஐக்கிய  நாடுகள்  சபையின்  உடன்படிக்கை கோட்பாட்டை மீறும் செயற்பாடாகும் என அமைச்சரும்,  சபை முதல்வருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (8)  நடைபெற்ற  மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்  பிரசுரிக்கப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு  செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்தியுள்ளதை ஜனநாயக விரோத செயற்பாடாகும். கட்சி என்ற அடிப்படையில் இதனை  கண்டித்து அறிக்கையிட்டுள்ளோம்.

 25 ஆண்டுகால ஜனநாயக  ஆட்சியை முன்னிலைப்படுத்தி  செயற்படும் வெனிசுவேலா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா, வெனிசுவேலாவுக்கு எதிராக பொருளாதாதார தடை விதித்தது.

2020 -2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் தலைமைத்துவத்தில் வெனிசுவேலா முன்னேற்றமடைந்தது.இவரது ஆட்சியில் தான் வெனிசுவேலாவில் கல்வி  மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் இலவசமாக்கப்பட்டன.

 நாட்டின் ஜனாதிபதி நல்லவராகவும், கெட்டவராகவும் இருக்கலாம் அவர் தொடர்பில்  தீர்மானம் எடுக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உண்டு. பிற நாடுகள் வந்து உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது. 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை  உருவாக்கப்பட்டது.இதன் பின்னர் தான் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கை இல்லாமல் போனது.

ஐக்கிய  அமெரிக்காவின் ஜனாதிபதி  31 சர்வதேச அமைப்புக்களில் இருந்தும், 35 சர்வதேச திட்டங்களில் இருந்தும் விலகுவதாக குறிப்பிடுகிறார்.இந்த சர்வதேச திட்டத்தில் ' கொழும்புத் திட்டம்' உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்  தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41